L1 புள்ளியை அடைந்து சாதனை படைத்த இஸ்ரோவின் ஆதித்யா எல்1

By SG Balan  |  First Published Jan 6, 2024, 4:26 PM IST

சூரியனை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்1 புள்ளியை வெற்றிகரமாக அடைந்துள்ளது.


சூரியனை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்1 புள்ளியை வெற்றிகரமாக அடைந்துள்ளது. சந்தியாரன்-3 வெற்றியைத் தொடர்ந்து இது இஸ்ரோவின் மற்றொரு சாதனையாக அமைந்துள்ளது.

இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் மட்டுமே சூரியனை ஆய்வு செய்வதற்கான திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தன. இப்போது, நான்காவது நாடாக இந்தியாவும் இந்த சாதனையைப் புரிந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இது குறித்து ட்விட்டரில் அறிவித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்,  ஆதித்யா எல்1 விண்கலம் பேசுவது போல "எனது சொந்த கிரகத்தில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள L1 (லெக்ராஞ்சியன் 1) புள்ளியை நான் பாதுகாப்பாக வந்துவிட்டேன். தொலைவில் இருப்பது உற்சாகமாக இருந்தாலும், சூரிய மர்மங்களை அவிழ்க்க தயார்" என்று பதிவிட்டுள்ளது.

Aditya L1: ஆதித்யா எல்1 என்றால் என்ன? என்ன மாதிரியான ஆய்வுகளை இந்த விண்கலம் மேற்கொள்ளும்!!

Greetings from Aditya-L1!

I've safely arrived at Lagrange Point L1, 1.5 million km from my home planet. 🌍Excited to be far away, yet intimately connected to unravel the solar mysteries pic.twitter.com/BCudJgTmMN

— ISRO ADITYA-L1 (@ISRO_ADITYAL1)

இதுகுறித்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "இந்தியா மற்றொரு அடையாளத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலம் ஆதித்யா-எல்1 இலக்கை அடைந்துவிட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

விண்கலம் தற்போது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான புவியீர்ப்பு இல்லாத புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும். … pic.twitter.com/G1O22liVvH

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

"மிகவும் சிக்கலான மற்றும் சவாலான விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து விஸ்தரிப்போம்" என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

click me!