முலாயம், அகிலேஷ், மாயாவதிக்கு பாதுகாப்பு ரத்து- விஐபி கலாச்சாரத்தை முடித்து வைத்த ஆதித்யநாத்

 
Published : Apr 23, 2017, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
முலாயம், அகிலேஷ், மாயாவதிக்கு பாதுகாப்பு ரத்து- விஐபி கலாச்சாரத்தை முடித்து வைத்த ஆதித்யநாத்

சுருக்கம்

adithiyanath cancelled the security force from mulayam akilesh

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் முதல்வர்  அகிலேஷ் யாதவ்,பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட பல வி.ஜ.பி.களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீரென ரத்து செய்தார்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பின் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்று பல அதிரடியான நடவடிக்கைகளை ேமற் கொண்டு வருகிறார்.

விவசாய பயிர்கடன் தள்ளுபடி, மின் கட்டண தள்ளுபடி, பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்படை, அரசு அதிகாரிகளுக்கு ஒழுக்கநெறிகள், வி.ஐ.பி. கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், மாநிலத்தில் வி.ஐ.பி. கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வி.ஐ.பி. பாதுகாப்பை முதல்வர் ஆதித்யநாத்திடீரென ரத்து செய்தார்.

உ.பி. அரசின் முதன்மை உள்துறை செயலாளர், உளவுப்பிரிவு, புதிய டி.ஜி.பி. சுல்கான் சிங் ஆகியோருடன் முதல்வர் ஆதித்யநாத் சனிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். அதன்முடிவில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

குறிப்பாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அவரின் மனைவியும், எம்.பி.யுமான டிம்பிள் யாதவ், முலாயம்சிங் சகோதரர் ராம் கோபால் யாதவ், சிவபால் யாதவ், ஆசம்கான், பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர்மாயாவதி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த வி.ஜ.பி. பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் பொதுச்செயலாளரும், எம்.பியுமான சதீஸ் சந்திரமிஸ்ராவுக்கு ஒட்டுமொத்தமாக அனைத்து பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மிஸ்ராவுக்குமத்திய அரசு , மாநில அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் நிதித்துறை முதன்மைச் செயலாளர் அலோக் ராஜன், சமாஜ்வாதி எம்.எல்.சி.(மேலவை) அடுல் பிரதான், அசு மாலிக்ஆகியோருக்கும் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 151 வி.ஜ.பி.களில் 105 பேருக்கு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு, 46 பேருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பா.ஜனதாவின் மூத்த தலைவர் வினய் கத்தியாருக்கு இசட் பிரிவு பாதுகாப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!