டெல்லியில் ஜிஎஸ்டி விளக்கக் கூட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

 
Published : Apr 23, 2017, 10:31 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
டெல்லியில் ஜிஎஸ்டி விளக்கக் கூட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

சுருக்கம்

GST meeting started in delhi

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி.எஸ்.டி. விளக்கக் கூட்டம் தொடங்கியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஜி.எஸ்.டி.க்கான 4 துணை சட்டங்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி. சட்டம் மே அல்லது ஜூன் வாரத்தில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜி.எஸ்.டி. குறித்து மாநிலங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக விளக்கப் பொதுக்கூட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. 

இந்தவரிசையில் டெல்லியில் மோடி தலைமையில் ஜி.எஸ்.டி.விளக்கக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி உள்ளிட்ட 13 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி,பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!