இந்தியா முழுவதும்..! "6 டிஜிட் எண்ணாக மாறுகிறது வீட்டு விலாசம்"...! மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
இந்தியா முழுவதும்..! "6 டிஜிட் எண்ணாக மாறுகிறது வீட்டு விலாசம்"...! மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

சுருக்கம்

ADDRESS HAS TO BE CONVERTED AS 6 DIGIT IN ALL OVER INDIA SOON

கருப்பு பண ஒழிப்பு முதல் டிஜிட்டல் இந்தியா வரை அனைத்தும்  மக்கள்  மத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது

மாபெரும் திட்டத்தை நூறு கோடிக்கும் அதிகமாக வாழும் இந்தியாவில் கருப்பு பண ஒழிப்பு  நடவடிக்கையாக மத்திய அரசு கொண்டுவந்த  இந்த  திட்டத்தை உலக மக்களே  வியந்து பார்த்தனர்

இதனை அடுத்து பல அதிரடி மாற்றங்களை  மத்திய அரசு கொண்டு வர  திட்டமிட்டு தற்போது  களத்தில்  இறங்கி உள்ளது

புதிய திட்டம்  

வீடு மற்றும் அலுவலகங்களுக்கு "டிஜிட்டல் டே" கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விசாலமும் அகற்றப்பட்டு "டிஜிட்டல் டேக்" பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம்  செயல்பட  உள்ளது

தபால் துறை என்ன செய்ய  போகிறது தெரியுமா ?

தகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை, இந்தியாவில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு 3 இலக்க பின்கோடை அடிப்படையாகக் கொண்டு 6 இலக்க ஆல்பாநியூமரிக் முறையை  அறிமுகம் செய்யும்  திட்டத்தில்  இறங்கி உள்ளது

உதாரணம்:

THE123 (ஆங்கில எழுத்துகள் உடன் எண்கள்) டிஜிட்டல் டேக் .இது போன்று தான் இனி  இருக்கும்.

மின்னணு  முறையிலான இருப்பிட விலாசம்

நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக ஈ-லொகேஷன், ஆதாவது மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.இதன் மூலம், தற்போது உள்ள விலாசம் படி,

பெயர்,ஊர்,தெரு பெயர்,வீட்டு எண்....இதுபோன்ற  எந்த  தகவலும்  அதில்  இருக்காது...

இந்த திட்டத்தின்  பயன் ?

அனைத்து அசையா சொத்துக்களையும் மின்னணு முறையில் இணைப்பதன் மூலம் சொத்தின் விபரம், அதன் உரிமையாளர், சொத்து வரி அறிக்கைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விபரங்கள் என அனைத்தையும் ஒற்றைத் தளத்தில் கொண்டுவர முடியும் என்பது  தான்

இனி வரும் காலங்களில்  ஒருவர் வீட்டிற்கு செல்ல  வேண்டும் என்றால். விலாசத்திற்கு  பாத்திலாக  ஆறு  டிஜிட் எண்ணை பயன்படுத்தினாலே  போதும்....

மேப்மைஇந்தியா

மேப்மைஇந்தியா மூலம், 6 இலக்க எண்-ஐ பதிவிட்டால் போதும் செல்லும் வழியைக் காட்டிவிடும்.
இத்திட்டத்தை முதல்கட்டமாக டெல்லி மற்றும் நொய்டாவில் 2 பகுதிகள் அதாவது 2 பின்கோடுகளுக்கு மட்டுமே டிஜிட்டல் டேக்-ஐ உருவாக்கப்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா போன்ற நெருக்கமான நாடுகளில் வீடு மற்றும் அலுவலகங்களை விரைவாகக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று, அதனை எளிமைப்படுத்தும் ஒரு முயற்சிதான் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் என்று மேப்மைஇந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார் என்பது   குறிப்பிடத்தக்கது

இத்திட்டத்தின் மாதிரி மற்றும் முழுவிபரங்களை மேம்மைஇந்தியா மத்திய தபால் துறையிடம் விளக்கம் அளித்த பின்பு, அதனை முழுமையாக ஆய்வு செய்த பின்பே இத்திட்டத்திற்குத் தபால் துறை ஒப்புதல் அளித்துள்ளது என்பது கூடுதல்  தகவல்

இந்த  திட்டம்  வெற்றி அடையும்  பட்சத்தில்,இந்தியா  முழுவதும் மிக  விரைவில்  அமல்படுத்தப்படும்  என  தெரிவிக்கப்பட்டு  உள்ளது

இந்த  திட்டம் வெற்றி  பெரும் தருவாயில், இந்தியாவை  டிஜிட்டல் இந்தியா  என்றே அழைக்கலாம்.....அதற்கான  காலம்  வெகு தொலைவில் இல்லை...

PREV
click me!

Recommended Stories

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!