அட ஏழுமலையானே!! உன்னைப் பார்க்கவும் ஆதார் கார்டு வேணுமா ? பக்தர்கள் புலம்பல்…

 
Published : Jun 24, 2017, 07:15 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
அட ஏழுமலையானே!! உன்னைப் பார்க்கவும் ஆதார் கார்டு வேணுமா ? பக்தர்கள் புலம்பல்…

சுருக்கம்

Adar card must for thirumalai darshan

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாடகை அறை, விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு, ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றுக்கு இதுவரை அவர்களிடம் உள்ள புகைப்படம் அடையாள அட்டை ஏதாவது ஒன்றை அளித்து பெற்று வந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் வங்கி கணக்குகள், பான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் தேவஸ்தானமும், அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க உள்ளதாக சீனிவாச ராஜு  தெரிவித்தார்.

 

ஒரு சில பக்தர்கள்  ஆதார் அட்டை இருந்தாலும், வேறு சில அடையாள அட்டையைக் காண்பித்து வருவதால் இனி திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.

மேலும் கோடை விடுமுறையின்போது பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பரிந்துரை கடிதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது கோடை விடுமுறை முடிந்து விட்டதால் மீண்டும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் பரிந்துரை கடிதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரேக் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் இனி கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்று திருமலை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார்.


 

 

 

PREV
click me!

Recommended Stories

விவி ராஜேஷ் மேயர்..! ஸ்ரீலேகா ஐபிஎஸ் துணை மேயர்.. திருவனந்தபுரம் பாஜக முடிவு
10 மீ. கூட வியூ இல்லை.. கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. 4 பேர் பலி, 25 பேர் படுகாயம்