Large-Scale Solar Developers : சுத்தமான எரிசக்தி சார்ந்த தகவல் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான மெர்காம் கேபிட்டலின் வெளியிட்ட அறிக்கையில், அதானி கிரீன் எனர்ஜி, உலக அளவில் பெரிய அளவிலான சூரிய சக்தியை உருவாக்குபவர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
Mercom Capital என்ற அந்த நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த ஜூலை 2022ம் ஆண்டு முதல் ஜூன் 2023ம் ஆண்டு வரையிலான தரவுகளை உள்ளடக்கியுள்ளதாகவும், குறைந்தபட்சம் இரண்டு நாடுகளில் உள்ள திட்டங்களுடன் தரவரிசைகள் மற்றும் தரவரிசை டெவலப்பர்களை தொகுக்க குறிப்பிட்ட அளவுகோல்களைப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில் 41.3 GW மொத்த திறனுடன், பிரான்ஸை தளமாகக் கொண்ட Total Energies அதன் செயல்பாட்டு, கட்டுமானத்தில் உள்ள மற்றும் வழங்கப்பட்ட (PPA-ஒப்பந்த) திட்டங்களின் அடிப்படையில் உலகின் சிறந்த சூரிய PV (ஃபோட்டோவோல்டாயிக் சிஸ்டம்) டெவலப்பராக உருவெடுத்துள்ளது.
undefined
ISIS சதி வழக்கு.. 40 இடங்களில் NIA அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை - 13 பேர் சிக்கியது எப்படி?
இந்நிலையில் வெளியான அந்த பட்டியலில் அதானியின் கிரீன் எனர்ஜி சுமார் 18.1 ஜிகாவாட்டுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த புரூக்ஃபீல்ட் புதுப்பிக்கத்தக்க பார்ட்னர்ஸ் 18 ஜிகாவாட்டுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இதுகுறித்து தனது ட்விட்டர் வெளியிட்ட பதிவில் "மெர்காம் கேப்பிட்டலின் சமீபத்திய தரவரிசையைப் பார்க்க நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உலகின் பெரிய அளவிலான சோலார் PV டெவலப்பர்களில் உலகளவில் எங்களை இரண்டாவது இடத்தில் நிலைநிறுத்தியுள்ளது பெருமையளிக்கிறது. இந்த அங்கீகாரம் எங்களை உலகில் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.
இன்று முதல் பெண்கள், திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம்.. மகாலட்சுமி திட்டம் தொடக்கம்..
We are happy to see Mercom Capital's recent rankings, placing us second globally among the world's large-scale solar PV developers. This recognition underscores our continued and unwavering commitment as one of the fastest growing renewable energy players in the world and on…
— Gautam Adani (@gautam_adani)மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் 45 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் என்ற எங்கள் லட்சிய இலக்கை அடைவதற்கான இலக்கை அடையவும் ஊக்குவிக்கிறது என்று கெளதம் அதானி தெரிவித்துள்ளார். உலகளாவிய சூரிய சக்தியை உருவாக்குபவர்களில், ஆறு நிறுவனங்கள் ஐரோப்பாவிலும், மூன்று நிறுவனங்கள் வட அமெரிக்காவிலும், ஒன்று தெற்காசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.