டீசல் தட்டுப்பாடு.. அரசு பேருந்துகள் சேவை திடீர் நிறுத்தம் - பொதுமக்கள் பாதிப்பு !

By Raghupati RFirst Published Aug 8, 2022, 5:02 PM IST
Highlights

பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது. உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் காரணமாக இயற்கை எரிவாயு ஏற்றுமதி, எண்ணெய் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இதனால், ஐரோப்பிய நாடுகளும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.10,196.94 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு மரணம்.. பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை !

கேரளா அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் ரூ.6.5 கோடி. இதில் டீசல் செலவு ரூ.3.5 கோடி. இதனை எண்ணெய் நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கேரள அரசுபோக்குவரத்துக் கழகம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி ரூ.135 கோடியாக உயர்ந்து உள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டன. எனவே போக்குவரத்துக் கழகம் தற்போது, ​​தினமும் பணம் செலுத்தி டீசல் கொள்முதல் செய்து வருகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) நிலுவையில் உள்ள ரூ.123 கோடி மற்றும் வட்டி உட்பட முந்தைய பாக்கியான ரூ.139 கோடியை தீர்க்காமல் டீசல் வழங்க மறுத்துவிட்டது. இதனால் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தனது சேவைகளை குறைத்து உள்ளது. 

டீசல் தட்டுப்பாடு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காரணமாக நீண்ட தூர சேவைகள் மற்றும் 50 சதவீத பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, கனமழை காரணமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, அம்மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!