நடிகை ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்

 
Published : Jun 11, 2018, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
நடிகை ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்

சுருக்கம்

Actress Shweta Menon threatens to kill her

நடிகை ஸ்வேதா மேனனுக்கு மிரட்டல் போன் அழைப்புகள் வந்ததை அடுத்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல நடிகை ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது செல்போனுக்கு நேற்று சிலர் பேசியுள்ளர். தெரியாத நெம்பரில் இருந்து வந்த அந்த அழைப்பில் பேசியவர்கள், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாழ்த்துக்கள் கூறினர்.

தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் செல்போன் அழைப்புகள் வந்தன. நெம்பரும் பெயரும் இல்லாமல் வந்த அந்த அழைப்பை எடுத்து பேசிய ஸ்வேதா மேனனை, எதிர்முனையில் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டினர். அதோடு அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மேனன், போலீசில் புகார் செய்தார். 

மலையாள நடிகர் (அம்மா) சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஸ்வேதா மேனன் கூறும்போது, நான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல நடிகைகள் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கீது மோகன்தாஸ், காவ்யா, ரம்யா உட்பட பலர் இருந்துள்ளனர். இதையடுத்து நானும் போட்டியிடுகிறேன். மிரட்டல் குறித்து கவலையில் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அநியாயம்! தட்டிக்கேட்ட பெண்ணை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பொசுக்கிய கொடூரர்கள்!
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்