இந்தியாவின் ‘டாப் 10’ கோடீஸ்வர பிரபலங்கள் - 7-வது இடம் பிடித்த பிரியங்கா சோப்ரா மட்டுமே பெண்

Asianet News Tamil  
Published : Dec 22, 2017, 09:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
இந்தியாவின் ‘டாப் 10’ கோடீஸ்வர பிரபலங்கள் - 7-வது இடம் பிடித்த பிரியங்கா சோப்ரா மட்டுமே பெண்

சுருக்கம்

Actress Priyanka Chopra is ranked 7th in the Top 10 list of Indian Mollywood celebrities.

இந்திய கோடீஸ்வர பிரபலங்களின் ‘டாப் 10’ பட்டியலில் ஒரே பெண்ணான நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது.

சல்மானுக்கு முதல் இடம்

போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் 100 பிரபலங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

சினிமா படங்களில் நடித்தது தவிர, பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் கடந்த 1-10-2016 முதல் 30-9-2017 வரை சல்மான் கான் 232 கோடியே 83 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

கோலிக்கு 3-ம் இடம்

இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ள ஷாருக்கான் 170.05 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

100.72 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார்.

அக்‌ஷய் குமார் மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் முறையே 4, 5 வது இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு 98.25 கோடி ரூபாயும், 82.50 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது.

பிரியங்கா சோப்ரா

நடிகர் அமீர்கான் ரூ. 68.75 வருமானத்துடன் 6-வது இடத்தில் உள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா ரூ. 68 கோடி வருமானத்துடன் 7 வது இடத்திலும் டோனி 63.77 கோடி வருமானத்துடன் 8-வது இடத்திலும் உள்ளார்.

ஹிர்திக் ரோஷன் ரூ.63.16 கோடி வருமானத்துடன் 9-வது இடத்திலும், ரன்வீர் சிங் 62.63 கோடி வருமானத்துடன் 10 வது இடத்திலும் உள்ளனர்.

பி.வி.சிந்து

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பின்னர் பேட்மின்டன் வீராங்கனை பிவி.சிந்துவின் வருமானம் 17 மடங்கு அதிகரித்துள்ளது.

பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் இவர் 57.25 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். இவர் 13 வது இடத்தில் உள்ளார்.

யார்-யார்?

முதல் 10 இடம் பிடித்தவர்கள் வருமாறு-

1) சல்மான் கான் (ரூ 232.83 கோடி) 2) ஷாருக்கான் (ரூ. 170.50 கோடி) 3) விராட்கோலி (ரூ .100.72 கோடி) 4) அக்ஷய் குமார் (ரூ. 98.25 கோடி) 5) சச்சின் தெண்டுல்கர் (ரூ. 82.50 கோடி)

6) அமீர்கான் (ரூ .68.75 கோடி) 7) பிரியங்கா சோப்ரா (ரூ 68 கோடி) 8) எம்.எஸ். டோனி (ரூ 63.77 கோடி) 9) ஹிர்திக் ரோஷன் (ரூ. 63.12 கோடி)10) ரன்வீர் சிங் (62.63 கோடி ரூபாய்).

ரஜினி, கமலுக்கு இடமில்லை:

நடிகர் விஜய்க்கு 31-வது இடம்

ரூ. 29 கோடியுடன் விஜய் 31-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜெயம் ரவி 39-வது இடம்பிடித்துள்ள இந்தப் பட்டியலில் ரஜினி, கமல் இடம்பெறவில்லை. ஆனால் ரூ. 11 கோடியுடன் தனுஷ் 70-வது இடத்தில் உள்ளார்.

இந்தியப் பிரபலங்களின் ஒரு வருட வருமானத்தைக் கொண்டு இந்தப் பட்டியலை உருவாக்கியதாக ஃபோர்ப்ஸ் அறிவித்துள்ளது.

கடந்த வருடப் பட்டியலில் 11 தென்னிந்திய நடிகர்களே இடம்பெற்றார்கள். ஆனால் இந்தமுறை 13 பேர் இடம்பிடித்துள்ளார்கள்.

PREV
click me!

Recommended Stories

320 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் புல்லட் ரயில்.. தேதி குறித்த மத்திய அமைச்சர்..!
மாஸ் காட்டும் இந்தியன் ரயில்வே.. 180 கிமீ ஸ்பீடு..! நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் ரெடி