மேதா பட்கரின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டுதான் அதிகபட்ச தண்டனை வழங்காமல் குறைவான தண்டனை அளித்திருப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் நர்மதா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக அறக்கட்டளை தொடங்கியவர். நர்மதா ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தியதன் மூலம் நாடு முழுவதும் பரவலாக கவனம் பெற்றார்.
இவர் தனது அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பதற்காக மக்களை தவறாக வழிநடத்தியதாக புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு பற்றி பேட்டி ஒன்றில் பேசிய மேதா பட்கர், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டார் என வி.கே.சக்சேனா வழக்கு தொடர்ந்தார்.
ஐயோ! இந்துக்களை இப்படி பேசிட்டாரே... ராகுல் காந்தியை உடனே மன்னிப்பு கேட்கச் சொல்லும் ஜே.பி.நட்டா!
இப்போது டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருக்கும் வி.கே.சக்சேனா 2001ஆம் ஆண்டு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவராக இருந்தபோது, இந்த வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மேதா பட்கர் மட்டுமின்றி மொத்தம் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், மேதா பட்கர் குற்றவாளி என மே 24ஆம் தேதியே தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனையை பின்னர் அறிவிப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று தண்டனை விவரத்தை டெல்லி நீதிமன்றம் அறிவித்தது. மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனையுடன், வி.கே.சக்சேனாவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மேதா பட்கருக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டுதான் அதிக தண்டனை அளிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேதா பட்கர் – வி.கே.சக்சேனா இடையே 2000ஆம் ஆண்டு முதல் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. வி.கே.சக்சேனா அகமதாபாத் நேஷனல் கவுன்சில் ஃபார் சிவில் லிபர்டீஸ் என்ற அமைப்பின் தலைவராக இருந்தபோது, அவருக்கு எதிராக மேதா பட்கரும் வழக்குகளை தொடர்ந்தார்.
பாஜக நீட் தேர்வை வணித் தேர்வாக மாற்றிவிட்டது! மக்களவையில் அனல் பறக்கப் பேசிய ராகுல் காந்தி!