ஐயோ! இந்துக்களை இப்படி பேசிட்டாரே... ராகுல் காந்தியை உடனே மன்னிப்பு கேட்கச் சொல்லும் ஜே.பி.நட்டா!

By SG Balan  |  First Published Jul 1, 2024, 6:37 PM IST

ட்விட்டரில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் ராகுல் காந்தியை விமர்சித்திருக்கும் ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி அப்பட்டமான பொய் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வலியுறுத்தி இருக்கிறார்.

ட்விட்டரில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் ராகுல் காந்தியை விமர்சித்திருக்கும் ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி அப்பட்டமான பொய் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "முதல் நாளே மோசமான நிகழ்ச்சி" என்று கூறியுள்ள நட்டா, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சு பொய்யும் இந்து வெறுப்பும் கலந்ததாக இருக்கிறது என்றும் சாடியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

"மூன்றாவது முறையாக தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சித் தலைவர் சாமர்த்தியமாகப் பேசுகிறார். 2024ஆம் ஆண்டில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவருக்கு எந்த விதத்திலும் பணிவு இல்லை என்பதை அவரது இன்றைய பேச்சு காட்டுகிறது" எனவும் நட்டா கூறியிருக்கிறார்.

பாஜக நீட் தேர்வை வணித் தேர்வாக மாற்றிவிட்டது! மக்களவையில் அனல் பறக்கப் பேசிய ராகுல் காந்தி!

The Leader of the Opposition is now a 5 time MP but he has not learnt Parliamentary norms and neither does he understand civility. Time and again, he reduces the levels of discourse. His utterances towards the Chair today were in very poor taste. He owes and apology to the Chair…

— Jagat Prakash Nadda (@JPNadda)

மேலும், "அனைத்து இந்துக்களையும் வன்முறையாளர்கள் என்று கூறியதற்காக ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இதே நபர்தான் வெளிநாட்டிலும் இந்துக்களை பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் இந்துக்கள் மீதான உள்ளார்ந்த வெறுப்பை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

"எதிர்க்கட்சித் தலைவர் இப்போது ஐந்தாவது முறை எம்.பி.யாக இருக்கிறார். ஆனால் நாடாளுமன்ற நெறிமுறைகளை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. நாகரிகம் என்றால் என்ன என்று புரியவில்லை. மீண்டும் மீண்டும் அவர் பேச்சின் தரத்தைக் குறைத்துக்கொண்டே போகிறார். இன்று சபாநாயகரை நோக்கி அவர் பேசியது மிகவும் மோசமாக இருந்தது. அவர் கண்டிப்பாக மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என நட்டா தெரிவித்துள்ளார்.

கடினமாக உழைக்கும் விவசாயிகள், துணிச்சலான ஆயுதப் படையினர் உள்பட பலரைப்பற்றி ராகுல் காந்தி அப்பட்டமாக பொய் கூறியிருக்கிறார் என்று சொல்லும் நட்டா, தனது மலிவான அரசியலுக்காக அவர் விவசாயிகளையும் பாதுகாப்புப் படையினரையும் கூட விட்டுவைக்க மாட்டார் என்றும் குற்றம்சாட்டினார்.

ஒரு வாட்ச்க்கு இத்தனை கோடியா! வாயைப் பிளக்க வைக்கும் ஆனந்த் அம்பானியின் காஸ்ட்லி வாட்ச்!

click me!