Latest Videos

பாஜக நீட் தேர்வை வணித் தேர்வாக மாற்றிவிட்டது! மக்களவையில் அனல் பறக்கப் பேசிய ராகுல் காந்தி!

By SG BalanFirst Published Jul 1, 2024, 4:48 PM IST
Highlights

"நான் பல நீட் மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது என்னவென்றால், இந்தத் தேர்வு பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஏழை மாணவர்களுக்கு உதவுவதாக இல்லை" என்றும் அவர் கூறினார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் இன்று காரசாரமாக நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சால், விவாதத்தில் அனல் பறந்தது.

வினாத்தாள் கசிவு குறித்த கவலையை எழுப்பிய ராகுல் காந்தி, "7 ஆண்டுகளில், 70 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. ஜனாதிபதி உரையில், நீட் அல்லது அக்னிவீர் விவகாரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்காக ஒருநாள் விவாதம் நடத்தக் கோரினோம். ஆனால் இதை விவாதிக்க முடியாது என்று இந்த அரசு மறுத்துவிட்டது" என்று கூறினார்.

"நீட் மாணவர்கள் தங்கள் தேர்வுக்காக பல ஆண்டுகளாகத் தயாராகிறார்கள். அவர்களின் குடும்பம் அவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஆதரவளிக்கிறது. உண்மை என்னவென்றால், நீட் மாணவர்கள் இன்று தேர்வில் நம்பிக்கை வைப்பதில்லை. ஏனெனில் தேர்வு பணக்காரர்களுக்கானதாக உள்ளது. தகுதி உள்ளவர்களுக்கானதாக அல்ல" என்று ராகுல் காந்தி கூறினார்.

ஒரு வாட்ச்க்கு இத்தனை கோடியா! வாயைப் பிளக்க வைக்கும் ஆனந்த் அம்பானியின் காஸ்ட்லி வாட்ச்!

"நான் பல நீட் மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது என்னவென்றால், இந்தத் தேர்வு பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஏழை மாணவர்களுக்கு உதவுவதாக இல்லை" என்றும் அவர் கூறினார்.

"நீட் என்பது தொழில்முறை தேர்வாக இல்லை. வணிக ரீதியிலான தேர்வாகவே உள்ளது. நீட் தேர்வு மாணவர்களுக்கான போட்டித்தேர்வாக இல்லை. தொழில்முறை தேர்வுகளை எல்லாம் வணிக முறை தேர்வுகளாக மாற்றிவிட்டீர்கள்" என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

அக்னிவீர் திட்டத்தை விமர்சித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், "அக்னிவீர் திட்டத்திலை சேருபவர்களை அரசாங்கம் உபயோகப்படுத்திக்கொண்டு தூக்கி எறிகிறது. ஒரு அக்னிவீரர் கண்ணிவெடி வெடிப்பில் உயிரிழந்தால் அவர் 'தியாகி' என்று அழைக்கப்படுவதில்லை" என்று சாடினார்.

எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்பு, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, அனைத்து கட்சிகளின் பொதுவான குரலாக தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

7,581 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன: ஆர்.பி.ஐ. தகவல்

click me!