கணவனாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமைதான்... அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!

Published : Mar 24, 2022, 11:01 PM IST
கணவனாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமைதான்... அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!

சுருக்கம்

பாலியல் வன்கொடுமை செய்தது கணவனாகவே இருந்தாலும் அது வன்கொடுமைதான் என வழக்கு ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பாலியல் வன்கொடுமை செய்தது கணவனாகவே இருந்தாலும் அது வன்கொடுமைதான் என வழக்கு ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து வருகிறது. வெளியே பெண்கள் பாலியல் சீண்டல்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது வீட்டிற்குள்ளும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை சந்தித்து வருகின்றன. சில இடங்களில் உறவினர்களால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவன் மீது மனைவி புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருமணம் என்பது ஆண்களுக்கு எந்த மிருகத்தனத்தையும் செய்வதற்கான சிறப்பு உரிமையை வழங்கிடவில்லை. பாலியல் வன்கொடுமை செய்தது கணவனாகவே இருந்தாலும் அது வன்கொடுமைதான் என தெரிவித்தனர்.

மேலும், கணவன் மீது புகார் அளிக்கப்பட்டதை பாலியல் வன்கொடுமை தான் என உறுதி செய்து பாலியல் வன்கொடுமை பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2006 ஆம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட போது வலி உணரவில்லை என தெரிவித்திருந்தார். ஆனால், உள்ளாடை அணிந்திருந்த போதும் குற்றம்சாட்டப்பட்டவர் தனது பிறப்பு உறுப்பின்மீது தேய்தார் என தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சிறுமியின் பிறப்பு உறுப்பு சிவப்பு நிறத்தில் இருந்தது தெரியவந்தது. இதனால், அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில், உள்ளாடையை கழற்றாமல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என எப்படி முடிவு செய்வது என குற்றம்சாட்டப்பட்டாவர் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து தீர்ப்பு தெரிவித்த மேகாலையா உயர்நீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் நடந்தபோது அந்த சிறுமிக்கு வலி இல்லையென்றாலும், உள்ளாடை கழற்றப்படாமல் இருந்திருந்தாலும், அவரது பிறப்பு உறுப்பின்மீது ஆணின் பிறப்பு உறுப்பை வைத்து தேய்த்தது சட்டப்படி குற்றம் என தெரிவித்திருக்கிறது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 375(பி)-ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. அதன்படி, இடுப்பில் அணியப்படும் உள்ளாடை மீது ஆணுறுப்பை செலுத்தினாலும், பாலியல் வன்கொடுமைதான் என மேகாலையா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது, பாலியல் வன்கொடுமை செய்தது கணவனாகவே இருந்தாலும் அது வன்கொடுமைதான் என்ற கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவு பலரது வரவேற்பை பெற்றுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!