Gujarat Election Result 2022:குஜராத் தேர்தல் முடிவு: ஆம் ஆத்மி முதல் வேட்பாளர் இசுதான் காத்வி முன்னிலை

By Pothy RajFirst Published Dec 8, 2022, 11:18 AM IST
Highlights

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசுதான் காத்வி கம்பாலியா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசுதான் காத்வி கம்பாலியா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

குஜராத்தில் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1ம் தேதி  89 தொகுதிகளுக்கும் மற்றும் 5ம் தேதி93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இன்று காலை முதல் 33 மாவட்டங்களில் 37 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன் சீல் உடைக்கப்பட்டு 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

குஜராத் தேர்தல் முடிவு: கம்யூனிஸ்ட்டுக்கு அடுத்து பாஜக! கொண்டாட்டம் ஆரம்பம்

வாக்குகள் எண்ணத் தொடங்கியதிலிருந்தே பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் நகர்ந்து வருகிறது. இதுவரை 150 இடங்களில் முன்நிலையுடன் பாஜக முன்னேறி வருகிறது. குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளில் பாஜக 150 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த முறை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக ஆம் ஆத்மி கட்சி களமிறங்கி கடுமையாகப் பிரச்சாரம் செய்தது. அந்த வகையில், அந்த கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்தத் தேர்தலில் கம்பாலியா தொகுதியில் இசுதன் காத்வி போட்டியிட்டார். தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இசுதன் காத்வி தன்னை எதிர்த்துப் போட்டியி்டட காங்கிரஸ் வேட்பாளரும் எம்எல்ஏவுமான விக்ரமைவிட முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் முலுபாய் பேரே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

குஜராத்தில் ஓட்டு எண்ணிக்கை:பாஜக அசுர முன்னிலை:ஹர்திக் படேல்,அல்பேஷ் பின்னடைவு

4 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காத்வி 13,658 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் 9889 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் பேரா 5,703 வாக்குகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்

சவுராஷ்டிரா மக்கள் அதிகம் வாழும் பகுதியில் கம்பாலியா தொகுதி அமைந்துள்ளது. ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் காத்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டும் கம்பாலியா தொகுதி அதிக முக்கியத்துவம் பெற்றது.

தொலைக்காட்சி நெறியாளரான காத்வி, காம்பாலியாவில் பிறந்து, வளர்ந்தவர் என்பதால், அங்கு போட்டியிட்டார். இங்கு அஹிர் சமூகத்தாயத்தினர் அதிகம்என்பதாலும், காத்வியும் அஹிர் சமூகம் என்பதாலும் இங்கு போட்டியிட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமும் அஹிர் சமூகம் என்பதால், காத்வி, விக்ரம் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. ஆனால், அதில் காத்வி முன்னேறி முன்னிலை பெற்றுள்ளார். இருப்பின் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்ஸில்கள் ஆதரவு இருப்பதால், அடுத்தடுத்த சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் நிலைமை மாறக்கூடும்.  


 

click me!