டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழ்வளர்ந்தால் மோடிக்கு பொறுக்காது, கெஜ்ரிவால் புகழ்வளர்ந்தால் அவரின் நிர்வாகத்திறமை என்று ஆம் ஆத்மி கட்சி பாஜகவை விளாசியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழ்வளர்ந்தால் மோடிக்கு பொறுக்காது, கெஜ்ரிவால் புகழ்வளர்ந்தால் அவரின் நிர்வாகத்திறமை என்று ஆம் ஆத்மி கட்சி பாஜகவை விளாசியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிஷோடியா வீட்டில் இன்று சிபிஐ ரெய்டு நடந்தது. இந்த ரெய்டு குறித்து ஆம் ஆத்மி, பாஜக தலைவர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் நடந்து வருகிறது.
அதானியாக வாழ்ந்த ஆர்டிஓ ! 5 நட்சத்திர பங்களா, ஜக்குசி, தியேட்டர்: மலைத்த அதிகாரிகள்
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது “ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழ்வளர்வது மோடிக்கு பிடிக்கவில்லை.
துணை முதல்வர் சிஷோடியா வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அதில் என்ன கிடைத்தது ஒன்றும் கிடைக்கவில்லை. பென்சிலும், ஜாமென்டரி பாக்ஸும்தான் இருந்தது. டெல்லி துணை முதல்வர் சிஷோடியாவை சிறையில் தள்ள பாஜக முயல்கிறது.
இதுவரை ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக 100 பொய் வழக்குள் போடப்பட்டுவிட்டன” எனத் தெரிவித்தார்
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் அளித்த பேட்டியில் “ அமெரி்க்காவில் வெளிவரும் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் முன்பக்கத்தில் டெல்லியில் உள்ள பள்ளியின் நிர்வாகம், கல்வித்தரம் குறித்து சிறப்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
இந்திய ராணுவத்தில் வேலை.. பிளஸ் 2 படித்திருந்தால் போதும்.. ரூ.92,000 வரை சம்பளம்..
அதோடு மட்டுமல்லாமல் டெல்லி கல்வி அமைச்சர் மணிஷ் சிஷோடியா, மாணவிகள் சிலரின் புகைப்படமும் இருந்தது. இது பாஜகவுக்கு பிடிக்கவில்லை. ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சிஅடைந்தது, பலரும் டெல்லி மாடல் கல்வி குறித்து கேட்கிறார்கள்.
ஆனால் அற்பத்தனமாக பிரதமர் மோடி சிபிஐ அமைப்பை ஏவி விடுகிறார். உண்மையில் கெஜ்ரிவால் புகழ் வளர்வது, டெல்லி நிர்வாகம், கல்வி முறை ஆகியவை பாஜகவுக்கு பிடிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில் “ எங்களின் இயக்கத்துக்கு பல தடைகள் உருவாக்கப்படும். சிஷோடியா வீட்டில் நடக்கும் முதல் ரெய்டு இதுவல்ல.
ரூ.250 கோடியில் மகளுக்கு ‘பாகுபலி’ திருமணம் செய்த டிஆர்எஸ் முன்னாள் எம்.பி: வியக்க வைத்த வசதிகள்
கடந்த காலத்திலும் பல ரெய்டுகள் நடந்துள்ளன. என்னுடைய அமைச்சர்கள் வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை. உலகின் சிறந்த கல்வி அமைச்சர் மணிஷ் சிஷோடியா. தி நியூயார்க் டைம்ஸ் நாளேடே பாராட்டிவிட்டது. இந்த சிபிஐ அளிக்கும் தடைகள் அவரைஒன்றும் செய்யாது ” எனத் தெரிவித்தார்