"இனி ஆதார் அட்டை இல்லாமல் திருப்பதி போகாதீங்க... தங்கமுடியாது...!!!

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 01:30 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
"இனி ஆதார் அட்டை இல்லாமல் திருப்பதி போகாதீங்க... தங்கமுடியாது...!!!

சுருக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் பெற ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லையென்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் அடையாள அட்டை அவசியம் என கோயில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களை இடைத்தரகர் தொல்லையில் இருந்து விடுவிக்கவும், வாடகை அறை பெறுவதற்கும், இணையதளத்தில் தரிசன சீட்டுகள் பெறவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி இருப்பதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

தர்ம தரிசனம், நடைபாதை பக்தர்கள் தரிசனம் தவிர்த்து பிற அனைத்து தரிசனங்களுக்கும், வாடகை அறை பெறவும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை. எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களுடன் வரும் மற்றவர்களின் ஆதார் அட்டை மூலம் வாடகை அறை, தரிசன சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tirumala Free Bus Service: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. இலவசமாக பயணிக்கலாம்
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? பென்ஷன் ரூ.57,000 வரை உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன?