ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்யும் காலக்கெடு நெருங்கி வருவதால், பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் அனைத்து திட்டங்கள், சேவைகளை பெறவும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு விட்டது.
இதனிடையே, பதிவுசெய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரில் உள்ள ஆதார் ஆவணங்களை புதுப்பிக்குமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பரிந்துரைத்தது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாத மக்கள் தங்களுடைய ஆதாரை விரைவில் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்தது. மேலும், ஆதார் அப்டேட் செய்வதை ஆன்லனில் இலவசமாக மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
undefined
கிரெடிட் கார்டு பற்றிய முக்கியமான விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!
அதன்படி மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் மக்கள் இலவசமாக புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 14ஆம் தேதி வரை ஆதார் கார்டை ஆன்லைனில் இலவசமாக நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் முறையில் மட்டுமே ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் சென்று ஆதார் கார்டில் அப்டேட் செய்ய விரும்பினால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியே பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை ஆதார் அட்டை பயனர்கள் இலவசமாக புதுப்பிக்க முடியும். புகைப்படம், கருவிழி மற்றும் பயோ மெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த இலவச காலத்துக்கு பின்னர், அந்த சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/portal என்ற வெப்சைட்டில் உள்நுழைந்து இலவச சேவையை அணுகலாம்.