
கொல்கத்தாவில் வயதான மாமியாரை அவரின் மருமகள் அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ஜசோதா பால் எனும் வயதான மூதாட்டி, தனது இரு மகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். இவர் சற்று மனநிலை சரி இல்லாதவர்.
ஜசோதாவின் மருமகள் ஸ்வப்னா அவரை அடித்து கொடுமைப்படுத்தும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வலம் வருகிறது. தோட்டத்தில் உள்ள பூவை ஜசோதா பறித்த காரணத்திற்காக, ஸ்வப்னா அவரை அடித்து கொடுமைப் படுத்தி இருக்கிறார்.
இந்த காட்சியை ஸ்வப்னாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.மனநலம் சரி இல்லாத அதிலும் வயதான பெண்மணியை ஸ்வப்னா இவ்வாறு தாக்கி இருப்பதை பார்த்து ஆதங்கப்பட்ட மக்கள், இந்த வீடியோ குறித்து கொல்கத்தா போலீசாரிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
அந்த புகாரை தொடர்ந்து ஸ்வப்னா மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறது கொல்கத்தா காவல்துறை. இது குறித்து கொல்கத்தா காவல் துறை தெரிவிக்கையில், இந்த வீடியோவை இருபத்தி ஐந்தாயிரம் பேர் இதுவரை இணையத்தில் பகிர்ந்திருக்கின்றனர். இதனால் எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. என தெரிவித்திருக்கிறார்.