காலாவை தடையின்றி ரிலீஸ் செய்யுங்கள்...! ரஜினி ரசிகர்கள் முதல்வரிடம் மனு

 
Published : Jun 01, 2018, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
காலாவை தடையின்றி ரிலீஸ் செய்யுங்கள்...! ரஜினி ரசிகர்கள் முதல்வரிடம் மனு

சுருக்கம்

Rajini fans petition to the chief minister kumarasamy

கர்நாடகாவில், காலா திரைப்படம் தடையின்றி வெளியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியிடம் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்திய என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, தமிழகத்துக்காக குரல் கொடுத்தார் ரஜினி. அதன் காரணமாக, அவரது காலா திரைப்படம், கர்நாடகாவில் வெளியிட தடை செய்ய வேண்டும் என்று வர்த்தக அமைப்புகள் அறிவித்துள்ளன. இதனால், காலா படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக அம்மாநில முதலமைச்ச்ர குமாரசாமியைக் கண்டிப்பாக சந்திப்போம் என்று கூறியுள்ளார். 

இந்த நிலையில், கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் தெடையின்றி வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காலா படம் வெளியாக இன்னும் ஒரு வார காலம் இருப்பதால், கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் என்றும் ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்