வாயில் ரப்பர் செருப்பை கவ்விச் செல்லும் பாம்பு; இணையத்தை கலக்கி வரும் வைரல் வீடியோ!!

By Dhanalakshmi G  |  First Published Nov 25, 2022, 4:43 PM IST

பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்பு பால் குடிக்கும் என்று கூறுவது உண்டு. ஆனால், பாம்பு பால் குடிக்காது என்று நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால், பாம்பு செருப்பை தூக்கிச் செல்லும் என்றால், நம்புவீர்களா?


இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பாம்பு ஒன்று செருப்பை வாயில் கவ்விச் செல்வது போன்ற வீடியோவை பதிவு செய்து இருக்கிறார். பாம்பு தனது வாயில் ரப்பர் செருப்பை கவ்விக் கொண்டு தலையை தூக்கியவாறு செல்கிறது. தனது பதிவில், ''பாம்பால் செருப்பை தூக்கிச் செல்ல முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு கால்களும் இல்லை. இது எந்த இடத்தில் என்று தெரியவில்லை'' என்று பர்வீன் கஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் இருக்கும் கேமராவில் பாம்பு தங்களது வீட்டை நெருங்குவதை பார்க்கின்றனர். பிங் நிற செருப்பை எடுத்து அதன் மீது வீசுகின்றனர். ஆனால், அதுவோ அதற்கு பயப்படாமல், வீசிய செருப்பை லாவகமாக கவ்விக் கொண்டு செல்கிறது. இந்த வீடியோவை பர்வீன் பகிர்ந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை 2.78 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஏறக்குறைய 7881 பேர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இன்னும் தொடர்ந்து பலர் லைக் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர். பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.  

I wonder what this snake will do with that chappal. He got no legs. Unknown location. pic.twitter.com/9oMzgzvUZd

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan)

Tap to resize

Latest Videos

click me!