பட்ஜெட் உரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 3,000 புதிய ஐடிஐ, 319 பல்கலைக்கழகங்கள் 7 ஐஐடிக்கள், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
undefined
இந்த நிலையில், பட்ஜெட் உரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவ்சர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்.” என பதிவிட்டுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
ஒரு சிறு திருத்தம்.
15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும். pic.twitter.com/LGlbfWIqmG
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நட்டப்பட்டதோடு சரி, இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. இதனை சுட்டிக்காட்டி, 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும் என நிர்மலாச் சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை : பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை வெளியானது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
Union budget 2024 இந்தியாவில் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்!
இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனால், அந்த மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் முடிந்து மருத்துவமனை தொடங்கப்பட்டு விட்டது.
ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. ஆனால், தற்போது வரை நிதி உதவி வராததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால்தான் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.