மல்யுத்த வீராங்கனைகள் மீது போலீஸார் அடக்குமுறையை ஏவி வரும் நிலையில் ற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை சாடியுள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகள் மீது போலீஸார் அடக்குமுறையை ஏவி வரும் நிலையில் ற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை சாடியுள்ளார். மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் போலீசில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: பதக்கங்களை கங்கையில் வீசி எறிவோம்: டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள் வெளியிட்ட உருக்கமான கடிதம்
இதையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை நீக்கக் கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் அடக்குமுறையை ஏவி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை சாடியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், எங்கள் மல்யுத்த வீரர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: எவரெஸ்ட்டில் வெற்றிக் கொடி நாட்டிய எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே; பிளாட்டினம் விழாவுக்கு ஏற்பாடு!!
நான் மல்யுத்த வீரர்களிடம் பேசி அவர்களுக்கு எங்கள் ஆதரவை வழங்கினேன். அவர்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒருவர் உடல்ரீதியாக தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டாலும், அவரை ஏன் கைது செய்யவில்லை? பூஜை பாதை என்பது மனிதநேயத்தை வழிபடும் போது தான் நடக்கும் என்று மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசை மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.