நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Earthquake in Nepal : நேபாளத்தில் இன்று இரவு 7.52 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதாவது, வட இந்தியாவின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

A 5.0 magnitude earthquake struck Nepal at tonight in Tamil rsk

Earthquake in Nepal : நேபாள் நாட்டில் இன்று இரவு 7:52 மணிக்கு (IST) 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. NCS-ன் படி, நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அட்சரேகை 28.83 N மற்றும் தீர்க்கரேகை 82.06 E இல் பதிவானதாக NCS தெரிவித்துள்ளது.

NCS தனது X பக்கத்தில், "M: 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், நேரம்: 04/04/2025 19:52:53 IST, அட்சரேகை: 28.83 N, தீர்க்கரேகை: 82.06 E, ஆழம்: 20 கிமீ, இடம்: நேபாளம்."

EQ of M: 5.0, On: 04/04/2025 19:52:53 IST, Lat: 28.83 N, Long: 82.06 E, Depth: 20 Km, Location: Nepal.
For more information Download the BhooKamp App பூகம்ப செயலியைப் பதிவிறக்கவும் pic.twitter.com/DxUFnxRvc7

— National Center for Seismology (@NCS_Earthquake)

Latest Videos

நேபாள் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏற்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 28ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதில், கிட்டத்தட்ட 3000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மியான்மர் நிலநடுக்கத்திற்கு பிறகு இப்போது நேபாளில் நில நடுக்க ஏற்பட்டிருக்கிறது.

vuukle one pixel image
click me!