98 வயது..! கொரோனாவை முழுமையாக வெற்றி கண்ட இந்திய மூதாட்டி..!

By Manikandan S R SFirst Published Apr 11, 2020, 9:34 AM IST
Highlights

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் திணறி வரும் நிலையில் அவ்வபோது ஆறுதல் தரக்கூடியதாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் செய்தி இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 98 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்ற நிகழ்வு மக்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் 4 மாதங்களாக அந்நாட்டை ஆட்டிப் படைத்தது. அங்கு 3,300 மக்கள் பலியாகி 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளை கொரோனா வைரஸ் தனது கோர பிடியில் தற்போது வைத்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது.

உலகளவில்  16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் 1,02,607 மக்கள் உயிரழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் திணறி வரும் நிலையில் அவ்வபோது ஆறுதல் தரக்கூடியதாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் செய்தி இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 98 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்ற நிகழ்வு மக்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தப்னே ஷா(98) என்கிற மூதாட்டி பிரிட்டனில் வசித்து வருகிறார். கேரள மாநிலம் கொச்சியை பூர்வீகமாக கொண்ட அவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவர் அவதிப்பட்டு வரவே மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் தப்னே ஷா தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் மெல்ல மெல்ல குணமடைந்து தற்போது வீடு திரும்பியிருக்கிறார். இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தனது மகன் தன்னை பல நாட்கள் கழித்து பார்ப்பதாகவும் தான் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். வரும் ஜூலை மாதம் 99 வயது தொடங்க இருக்கும் நிலையில் அதை சிறப்பாக கொண்டாடவும் தனது குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாக உற்சாகத்தோடு தெரிவித்திருக்கிறார்.

click me!