
இதுதான்யா கேரள போலீஸ்…..திடீர் ரெய்டில் பள்ளி வாகனத்தின் 93 டிரைவர்கள் சிக்கினார்கள்…..
காலை ேநரத்தில் போலீசார் நடத்திய அதிரடி ‘ஆப்ரேஷன் லிட்டில் ஸ்டார்’ ரெய்டில் குடிபோதையில் பள்ளி வாகனம் ஓட்டியதாக 93 டிரைவர்கள் சிக்கினார்கள்.
எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா மாவட்டங்களில் கேரள போலீசார், இந்த ஆப்ரேஷன் லிட்டில் ஸ்டார் ரெய்டை நடத்தினர்.
இது குறித்து கொச்சி போலீஸ் ஐ.ஜி. பி. விஜயன் கூறுகையில், “ எர்ணாகுளம், இடுக்கி, கோட்டம் மற்றும் ஆழப்புழா மாவட்டங்களில் இன்று காலை ஆப்ரோஷன் லிட்டல் ஸ்டார் என்ற பெயரில் காலை 6மணிக்கு வாகனங்களை மறித்து திடீர் ரெய்டு நடத்தினோம்.
குறிப்பாக பள்ளி வாகனங்களைச் சோதனைச் செய்து, டிரைவர்கள் மதுகுடித்து இருக்கிறார்களா, உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்களா, விதிமுறை மீறல்களில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்க முக்கிய உத்தரவு பிறப்பித்தோம்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த ரெய்டுமுக்கியமாக நடத்தப்பட்டது. அனைத்து டிரைவர்களிடமும் மிகவும் நவீன அறிவியல் முறையில் போலீசார் சோதனையிட்டு, குடித்து இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்தனர். ஒட்டுமொத்தமாக 6 ஆயிரத்து 78 வாகனங்களை ஆய்வு செய்தோம் இதில் பள்ளி வாகனங்களை ஓட்டி வந்த 92 டிரைவர்கள் குடிபோதையில் இருந்தனர். 179 பஸ்கள் கூடுதல் பயணிகளை ஏற்றி இருந்தனர், 58 பஸ்கள் மோசமான டயர்களோடு சாலையில் ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது, 26 வாகனங்கள் தகுதியின்று சாலையில் ஓடியது தெரியவந்தது.
இதில் குடிபோதையில் பள்ளி வாகனம் ஓட்டிய டிரைவர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட உள்ளது, அவர்கள் மீது குழந்தைகளை கவனக்குறைவுடன் அழைத்துச்சென்றது வகையில் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், பள்ளியின் நிர்வாகத்தினருக்கு எதிராகவும், இதுபோன்ற டிைரவர்களை நியமித்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஏனென்றால், இந்த டிரைவர்களை நியமித்தது, பள்ளி நிர்வாகம்தான். அவர்கள்தான் அடிக்கடி டிரைவர்களின் ஒழுக்கத்தை கண்காணிக்க வேண்டும், அந்த கடமை அவர்களுக்குத்தான் இருக்கிறது’’ என்றார்.