நள்ளிரவில் திடீரென மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்.! யார்.? யார் தெரியுமா.?

Published : Jul 05, 2025, 08:00 AM ISTUpdated : Jul 05, 2025, 10:11 AM IST
TAMILNADU SECRETARIAT

சுருக்கம்

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கலை அரசி, சம்பத், மகேஸ்வரி, ஜான் லூயிஸ், சரவண வேல்ராஜ், மோகன், சிவராசு, ராஜேந்திர ரத்னு, கேத்தரின் சரண்யா உள்ளிட்டோர் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tamilnadu IAS officer transfer : தமிழகத்தில் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சரியான முறையில் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிப்பதில் அரசு துறை அதிகார்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. இதே போல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதா.? குற்றங்கள் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறிவுறுத்தும் அதிகாரிகளாக ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த நிலையில் அவ்வப்போது நிர்வாக வசதிக்காக அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் மாவட்ட ஆட்சியகள், அரசு துறை செயலாளர்கள் என 55 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையராக கலை அரசி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலராக சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நில நிர்வாகம் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநராக மகேஸ்வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக மோகன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநராக சிவராசுக்கு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் -ராஜேந்திர ரத்னுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநராக கேத்தரின் சரண்யா நியமன செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!