அடி தூள்.!. அரசு ஊழியர்களுக்கு ‘அட்ரா சக்கை’ தீபாவளி போனஸ்… எவ்வளவு தெரியுமா..?

Published : Oct 06, 2021, 07:45 PM IST
அடி தூள்.!. அரசு ஊழியர்களுக்கு ‘அட்ரா சக்கை’ தீபாவளி போனஸ்… எவ்வளவு தெரியுமா..?

சுருக்கம்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ளன. தீபாவளி நெருங்கி வருவதை முன்னிட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போனஸ் கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.

இதில் ரயில்வே துறையாக ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனசை அறிவித்துள்ளது. தகுதி வாய்ந்த அதிகாரிகள் இல்லாத ஊழியர்களுக்கு  இந்த போனஸ் அறிவிக்கப்பட்டு  உள்ளது. அதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வ்ழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக தரப்படும். கிட்டத்தட்ட 11.56 லட்சம் ஊழியர்கள் இதனால் பலன் பெறுவார்கள் என்றார்.

மத்திய அரசின் இந்த போனஸ் அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் செம சந்தோஷத்தை அளித்துள்ளது. கடந்த முறை போன்று இம்முறை வழக்கமான PLB நடைமுறையே பின்பற்றப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!