மனிதாபிமானமே இந்தியாவின் சாராம்சம்… பா.ஜ.க. அரசுக்கு எதிராக பொங்கி எழுந்த நடிகை குஷ்பு..!

By manimegalai aFirst Published Oct 5, 2021, 1:55 PM IST
Highlights

விவசயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்தியவர் எவராக இருந்தாலும், உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

விவசயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்தியவர் எவராக இருந்தாலும், உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.-வில் இணைந்த நடிகை குஷ்பு, சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பின்னர் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். குஷ்பு மீண்டும் கட்சி மாறுகிறா என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டன. இந்தநிலையில் சொந்தக் கட்சியின் ஆட்சிக்கு எதிராகவே குஷ்பு பொங்கி எழுந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி, உலகையே உலுக்கியிருக்கிறது. சமூக வலைதளங்களில் தீயாய் பரவிவரும் தாக்குதல் வீடியோவை பார்த்த பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். காரை ஏற்றியது மத்திய அமைச்சரின் மகன் என்று கூறப்படுவதால் பாஜக மட்டும் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகின்றது. இந்தநிலையில் விவசாயிகள் மீதான கொடூர தாக்குலை நடிகை குஷ்பு கடுமையாக கண்டித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, நடிகை குஷ்பு தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: உத்தரப்பிரதேசத்தில் எட்டு போராட்டக்காரர்கள் மீது காரை விட்டு ஏற்றியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகக் கொடூரமான குற்றமாகும். இதற்கு காரணமானவர் யாராக இருந்தாலும், அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உயிர்களை விட எதும் முக்கியமல்ல. மனிதாபிமானமே இந்தியாவின் சாராம்சம். இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார். பா.ஜ.க.-வில் இருந்துகொண்டே அக்கட்சி தலைவர்களுக்கு எதிராக குஷ்பு பேசியிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.

click me!