உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் காணாமல் போன 75 ஆயிரம் குழந்தைகள்...

Asianet News Tamil  
Published : Sep 26, 2017, 09:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் காணாமல் போன 75 ஆயிரம் குழந்தைகள்...

சுருக்கம்

75000 children disappeared by the Ministry of Internal Affairs

மத்திய உள்துறை அமைச்சகம் ேமற்கொண்ட நடவடிக்கையால், நாடு முழுவதும் காணாமல் போன 75 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டு இருப்பதாக, ராஜ்நாத்சிங் கூறினார்.

குழந்தை தொழிலாளர் முறை

படெல்லியில் நேற்று நடந்த குழந்தை மற்றும் வயது வந்தோர் தொழிலாளர் கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது, 2‘‘022-ம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என கூறினார். அவர் மேலும் கூறியதாவது-

‘ஆபரேஷன் ஸ்மைல்’

நாட்டில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிவதற்காக ஆபரேசன் ஸ்மைல் திட்டம் உள்துறை அமைச்சகத்தினால் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதுநாள் வரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். இத்திட்டம் மாநில அரசாங்கங்களின் உதவியுடன் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடவுளின் அன்பளிப்பு

குழந்தை பருவம் கடவுளின் சிறந்த அன்பளிப்பு ஆகும். ஆனால், குழந்தை தொழிலாளராக சிக்கி கொண்டவர்கள் அந்த அழகிய பரிசை பெறாமல் இழந்து விடுகின்றனர்.

குழந்தை தொழிலாளர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க நாங்கள் முயற்சிப்போம்’‘.

இவ்வாறு அவர் கூறினார்.

‘பென்சில்’ வலைத்தளம்

இந்நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் இல்லாத முறையை உருவாக்குவதற்காக பென்சில் என்ற வலை தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வலைதளத்தில் குழந்தைகளை கண்காணிக்கும் திட்டம், புகார் பகுதி, மாநில அரசு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புகள் ஆகிய 5 அம்சங்கள் உள்ளன.

PREV
click me!

Recommended Stories

மகாராஷ்டிராவின் துணை முதல்வராகும் பெண்மணி.. யார் இந்த சுனேத்ரா பவார்..?
உலகின் ஆயுத தொழிற்சாலையாக மாறும் இந்தியா..! நன்றிக்கடனை தீர்க்கும் இஸ்ரேல்.. கைகோர்க்கும் அமெரிக்கா..!