"அசுர வேகத்தில் லாரியை ஓவர்டேக் செய்த கார்" - சம்பவ இடத்திலேயே 7 இளைஞர்கள் பலி

 
Published : May 04, 2017, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
"அசுர வேகத்தில் லாரியை ஓவர்டேக் செய்த கார்" - சம்பவ இடத்திலேயே 7 இளைஞர்கள் பலி

சுருக்கம்

7 youths killed in road accident

கர்நாட மாநிலம் ஷிமோகா என்ற இடத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 7 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து ஷிமோகாவில் நடைபெற உள்ள விழா ஒன்றில் கலந்து கொள்ள இன்னோவா காரில் பெங்களூரைச் சேர்ந்த மது, பிரவீன்,ஸ்ரீதர், ராகவேந்திரா, மஞ்சுநாத் உள்ளிட்ட  7 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அய்யனூர் என்ற இடத்தில் மரத் தடிகளை ஏற்றிக் கொண்டு முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அவர்கள் முந்த முயன்றனர். கார் மிக அதி வேகமா சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில்  காரில் சென்ற 7 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்,

தகவல் அறிந்த ஷிமோகா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!