மாம்பழத்திற்காக 7 வயது அப்பாவி சிறுவன் கொலை

 
Published : May 30, 2018, 05:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
மாம்பழத்திற்காக 7 வயது அப்பாவி சிறுவன் கொலை

சுருக்கம்

7 years old boy killed by the friend of his father just for some mangoes

பஞ்சாப் மாநிலத்தில் 7 வயது சிறுவன் சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனோஜ் குமார் என்ற சிறுவனின் தந்தை கமலேஷ் குமார் யாதவ். இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்.

வாரியான கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் தோட்ட வேலை செய்து வந்திருக்கிறார். தோட்டத்தில் சில நாட்களாக மாம்பழங்கள் திருடுபோவது அதிகமாகி இருந்திருக்கிறது. இதனால் மனோஜ் குமாரின் தந்தை கமலேஷ் குமார் தோட்டத்தை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறார்.

மனோஜின் தந்தைக்கு முகமது ஆலி எனும் நண்பர் இருந்திருக்கிறார். இவர் மனோஜின் தந்தையை பார்க்க மாந்தோட்டத்திற்கு வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் வந்த ஆலி தோட்டத்தில் யாரும் இல்லாமல் இருப்பதை கண்டவுடன் மாம்பழங்களை திருடத்தொடங்கி இருக்கிறார். இதை அங்கு நின்ற சிறுவன் மனோஜ் குமார் பார்த்ததுடன், ஆலி மாம்பழங்களை திருடுவதை தடுத்திருக்கிறார்.

இதனால் மனோஜ் மீது ஆலிக்கு ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது . கோபத்தில் முகம்மது ஆலி மனோஜின் தலை சுவற்றில் படும்படி அடித்திருக்கிறார். இதனால் மனோஜ் இறந்துவிடவே, அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார் ஆலி. இப்போது அவர் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. சாதாரண மாம்பழத்திற்காக ஒரு சிறுவன் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம், அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்