மருத்துவமனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதும் 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியின் விவேக் விஹாரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் குறைந்தது 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர்.
மருத்துவமனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதும் 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்கள் கிழக்கு டெல்லி அட்வான்ஸ் என்ஐசியூ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
மருத்துவமனை தீ விபத்து குறித்து இரவு 11.32 மணிக்கு அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறையினர் கூறுகின்றனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
பூமி மாதிரி இன்னொரு கிரகம் இருக்கு! டெஸ் சாட்டிலைட் மூலம் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்!
தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர அத்வால் கூறுகையில், "இரவு 11.32 மணியளவில், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.மொத்தம் 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முழுவதுமாக அணைத்துவிட்டன. 2 கட்டிடங்கள் தீயில் எரிந்தன. ஒன்று மருத்துவமனை கட்டிடம். வலது பக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 2 தளங்களும் தீப்பிடித்து எரிந்தன. 11-12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்" என்றார்.
"மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை" என டிஎஃப்எஸ் தலைவர் அதுல் கர்க் தெரிவித்துள்ளார். "விவேக் விஹார் பகுதியின் B பிளாக் ஐடிஐக்கு அருகில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து ஒரு தீயணைப்பு அழைப்பு வந்தது. மொத்தம் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன" என்றும் கார்க் கூறியுள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் விளையாட்டு மண்டலத்தில் பெரும் தீ விபத்தில் 27 பேர் பலியான ஒரு நாளில் மற்றொரு பயங்கர தீ விபத்து டெல்லியில் நடந்துள்ளது.
முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன? FIR பதிவு செய்த பின் காவல் நிலையத்தில் என்ன நடக்கும்?