இந்தியாவில் 5வது கொரோனா பலி..! ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்தார்..!

Published : Mar 20, 2020, 11:25 AM ISTUpdated : Mar 20, 2020, 11:33 AM IST
இந்தியாவில் 5வது கொரோனா பலி..! ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்தார்..!

சுருக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 69 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தற்போது இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 69 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பலி 5 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், மகாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியை அலற விடும் கொரோனா..! பலி எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியது..!

PREV
click me!

Recommended Stories

Raksha Bandhan 2026: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.! ரக்ஷா பந்தன் நாளில் ராக்கி கட்ட நல்ல நேரம் எது?
Sugar Price : சர்க்கரை வாங்குறதுக்கும் கட்டுப்பாடா? இனி சர்க்கரை இல்லாமல் வாழப் பழகணும் போல!