அடுத்த வாரம் முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்… புதுவை முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

Published : Dec 11, 2021, 05:04 PM IST
அடுத்த வாரம் முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்… புதுவை முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

சுருக்கம்

புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும் சிவப்பு மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும் சிவப்பு மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால், விளைச்சலுக்கு தயாராகி இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக உள்துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் புதுச்சேரிக்கு சென்றனர். முன்னதாக புதுச்சேரிக்கு வந்த மத்திய குழுவினர், தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி, துணை நிலை கவர்னர் ஆகியோரை சந்தித்து பேசினர். இந்நிலையில் புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முதலாவதாக பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து இந்திரா காந்தி சதுக்கம், பாகூர் தொகுதியில் உள்ள வயல்வெளி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் 5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். முன்னதாக புதுச்சேரி மாநிலத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 5,000க்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய குழு ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் உயரதிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி, ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை பாதிப்பாக புதுச்சேரிக்கு இடைக்கால நிவாரணமாக 300 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் மழை பாதிப்பால் அனைத்து சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். இதனிடையே, தற்போது அடுத்த வாரம் முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், இந்த நிலையில் அடுத்த வாரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் புதுவையில் சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் 5 ஆண்டுகளுக்குள் படிப்படையாக நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தாய் தந்தையைக் கொன்று ரம்பத்தால் துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்!
இந்தியாவுக்கு எதிராக சதி... ஒரே அடியில் பாடம் கற்றுக்கொடுக்கணும்..! யூனுஸ் அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள்..!