Election Results : 5 மாநிலங்களில் அரியணை ஏறப்போவது யார்..? லைவ் அப்டேட்ஸ்..!!

Published : Mar 10, 2022, 08:22 AM IST
Election Results : 5 மாநிலங்களில் அரியணை ஏறப்போவது யார்..? லைவ் அப்டேட்ஸ்..!!

சுருக்கம்

Election Results : உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

5 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு  பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.  ஒட்டுமொத்த உ.பி. சட்டசபை தேர்தலில் மொத்தம் 61.04% வாக்குகள் பதிவாகி யிருந்தன. 

அதேபோல் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு மொத்தம் 71.95% வாக்குகள் பதிவாகின. உத்தரகாண்ட் மாநிலத்திலும்,    கோவாவிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.  70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டில் மொத்தம் 65.37 % வாக்குகள் பதிவானது.  அதேபோல்  40  தொகுதிகளைக்  கொண்ட  கோவாவில் 79.61% வாக்குகள் பதிவாகின.

இதில் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 8 மற்றும் மார்ச் 5-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.  உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!