ஆந்திராவில் அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 5 பேர் பலி

Published : Oct 09, 2023, 11:26 AM IST
ஆந்திராவில் அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 5 பேர் பலி

சுருக்கம்

ஆந்திரா மாநிலத்தில் ஆட்டோவும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்.

ஆந்திர மாநிலம் உள்ள ஆஜாத் காலனியை சேர்ந்த  10 பேர் ஆட்டோ ஒன்றில் மல்லீலா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டலா அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபம் அருகே ஆந்திர மாநில அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் நசுங்கி சேதமடைந்தது. இதனால் ஆட்டோவில் பயணித்த மகமத் (25), ஜாக்கீர்(10), ஹசீனா( 25 )அமீனா (20) ஆகிய நான்கு பேர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

பயணிகளின் கனிவான கவனத்திற்கு; விழுப்புரம் - திருப்பதி இடையே ரயில் சேவையில் மாற்றம் 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த காவல் துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பொதட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரசுக்கு அதிகாரம் வேண்டும்; அனைத்து எம்எல்ஏக்களுடன் பிரதமரை சந்திப்போம் - முதல்வர் ரங்கசாமி

விபத்தில்  மரணம் அடைந்தவர்களின் உடல்கள் பொதட்டூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நேரு சொன்னதைத் திரிக்கும் மோடி.. வந்தே மாதரம் விவாதத்தில் பிச்சு உதறிய பிரியங்கா காந்தி!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!