நடிகையின் ஐந்து நிமிட நடனத்துக்கு ரூ.5 கோடி சம்பளமா...?

Asianet News Tamil  
Published : Dec 17, 2017, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
நடிகையின் ஐந்து நிமிட நடனத்துக்கு ரூ.5 கோடி சம்பளமா...?

சுருக்கம்

5-minute dance for Rs 5 crore Who is that actress!

ஜீ சினி அவார்ட் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா 5 நிமிட நடனமாட 5 கோடி ரூபாய் சம்பள பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபலமாக நடைபெறும் விழாக்களின்போது நடிகைகள் நடனமாடுவது வழக்கம். அந்த வகையில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியாங்கா சோப்ரா, வரும் 19 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் விருது வழங்கு விழாவில் நடனமாட உள்ளார்.

பிரியங்கா சோப்ரா, தற்போது மிகவும் பிசியாக உள்ளார். குவாண்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து தற்போது அவர் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா, விரைவில் இந்தியா திரும்ப உள்ளதாக அவரது இன்ஸ்டாகிராமில் அண்மையில் பதிவிட்டிருந்தார்.

அந்த வகையில், வரும் 19 ஆம் தேதி மும்பையில் ஜீ சினி அவார்ட் என்ற விருது வழங்கும் விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் பிரியங்கா சோப்ரா நடனமாட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த விழாவில் பிரியங்கா நடனமாட ரூ.5 கோடிக்கு ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நடனமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரியங்காவுக்கு இந்த தொகையை அளிக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்கள் சங்கமான கில்டு விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா நடனமாடினார். அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்ததை அடுத்து, தற்போது நடைபெற உள்ள ஜீ சினி அவார்ட் நிகழ்ச்சியும் அவர் கலந்து கொண்டு நடனமானட உள்ளார்.

வரும் 19 ஆம் தேதி நடைபெறு விருது வழங்கும் நிகழ்ச்சியில், பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், சாஹித் கபூர், கத்ரினா கைஃப், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜேக்குலன் ஃபெர்னாண்டஸ், பூமி பெட்னேகர் ஆகியோரும் நடனமாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!
‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!