உலகின் சிறந்த பள்ளிக்கான பரிசு யாருக்கு? போட்டியில் மதுரை பள்ளி முன்னிலை!

By SG BalanFirst Published Jun 17, 2024, 9:43 PM IST
Highlights

2024ஆம் ஆண்டில் உலகின் சிறந்த பள்ளிக்கான பரிசைப் பெற இந்தியாவில் உள்ள 5 பள்ளிகள் போட்டியிடுகின்றன. 50,000 டாலர் பரிசுக்குரிய இந்தப் போட்டியை பிரிட்டன் அமைப்பு நடத்துகிறது.

உலகின் சிறந்த பள்ளி என்ற பெருமையைப் பெறுவதற்கு பல்வேறு பிரிவுகளில் டாப் 10 பட்டியலில் ஐந்து இந்தியப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது உலகளவில் பள்ளிகளின் குறிப்பிடத்தக்க சமூக பங்களிப்புகளை அங்கீகரிக்க இங்கிலாந்தில் இருந்து நடத்தப்படும் போட்டி ஆகும்.

மத்தியப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகள் உலகின் சிறந்த பள்ளி பரிசு பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்களில்  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 50,000 டாலர் பரிசுக்குரிய இந்தப் போட்டி பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

Latest Videos

இந்த விருதுகள், சமூகப் பங்களிப்பு, சுற்றுச்சூழல் செயல்பாடுகள், கண்டுபிடிப்புகள், சவால்களைச் சமாளித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவளித்தல் போன்ற பிரிவுகளில் இந்த பரிசு கொடுக்கப்படுகிறது. இந்தப் பரிசை வழங்கும் T4 எஜுகேஷன் (T4 Education) என்ற அமைப்பு கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு பள்ளிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தை அங்கீகரிப்பதற்காக நிறுவப்பட்டது.

பிக்சட் டெபாசிட் வேண்டாமா? அதை விட பெஸ்டா போஸ்ட் ஆபீசில் நிறைய சாய்ஸ் இருக்கே! ட்ரை பண்ணி பாருங்க!

அரசு சிஎம் ரைஸ் மாடல் மேல்நிலைப் பள்ளி, ஜாபுவா; ரியான் சர்வதேச பள்ளி, வசந்த் குஞ்ச்; ஜி எச் எஸ் எஸ் வினோபா அம்பேத்கர் நகர், ரத்லம்; கல்வி இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி (மதுரை); மற்றும் மும்பை பப்ளிக் ஸ்கூல் எல் கே வாஜி இன்டர்நேஷனல் (ஐஜிசிஎஸ்இ) ஆகிய பள்ளிகள் இந்தப் போட்டியில் உள்ளன.

"இவை வலுவான கலாச்சாரத்தை வளர்த்துள்ளன. புதுமைகளை முயற்சி செய்யத் அஞ்சுவதில்லை. எல்லா இடங்களிலும் உள்ள பள்ளிகள் இப்போது இந்தப் பள்ளிகளிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். அரசாங்கங்களும் இதேபோல செய்யவேண்டிய நேரம் இது” என்று T4 எஜுகேஷன் அமைப்பின் நிறுவனர் விகாஸ் போட்டா கூறுகிறார்.

தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ள கல்வி இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, கல்வி மற்றும் விளையாட்டு மூலம் எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது என்றும் பின்தங்கிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்கள் சிறந்து விளங்க உதவுகிறது என்றும் பரிசு வழங்கும் அமைப்பு.

"சமூக ஒத்துழைப்பு" பிரிவில் உலகின் சிறந்த பள்ளி பரிசுக்கான முதல் 10 இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாக பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

click me!