அட கடவுளே சாவு எப்படியெல்லாம் வருது பார்த்தீங்களா? சாக்லேட் எடுக்க பிரிட்ஜை திறந்த சிறுமி.. துடிதுடித்து பலி

By vinoth kumar  |  First Published Oct 3, 2023, 3:45 PM IST

விடுமுறை முடிந்து வீடு திரும்புவதற்கு முன்னர் தந்தை சேகர் தனது மகளை ஷாப்பிங் செய்ய அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றார். 


சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுப்பதற்காக, ஃபிரிட்ஜை திறந்த 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நவிப்பேட்டையை சேர்ந்த சம்யுக்தா- சேகர் தம்பதி. இவர்களது 4 வயது மகள் ரித்திஷா. விடுமுறை முடிந்து வீடு திரும்புவதற்கு முன்னர் தந்தை சேகர் தனது மகளை ஷாப்பிங் செய்ய அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றார். விடுமுறை என்பதால் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். விடுமுறை முடிந்து வீடு திரும்புவதற்கு முன்னர் தந்தை சேகர் தனது மகளை ஷாப்பிங் செய்ய அங்கில் இருந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றார்.

Tap to resize

Latest Videos

 அப்போது சாக்லேட் எடுப்பதற்காக, சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பிரிட்ஜை சிறுமி ரித்திஷா திறந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை உடனே சிறுமியை காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக நிஜாமாபாத்துக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். 

இதையடுத்து நிஜாமாபாத்துக்கு சிறுமியை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

click me!