மத்திய அமைச்சரவையில் மாற்றம்! 4 அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு

By SG Balan  |  First Published Dec 7, 2023, 10:22 PM IST

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராஜினாமா செய்தவர்களின் இலாகாக்கள் நான்கு மத்திய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளன.


மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜினாமா செய்தவர்களின் இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நான்கு மத்திய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தற்போதுள்ள இலாகாவைத் தவிர, உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்கிறார்.

Tap to resize

Latest Videos

இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் ஏற்கனவே கவனித்துவரும் இலாகாக்களுடன் கூடுதலாக ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சராகும் செயல்பட உள்ளார்.

நேரு ரெண்டு தவறுகளைத் தவிர்த்திருந்தால்... மக்களவையில் அமித் ஷா ஆவேசப் பேச்சு

இணை அமைச்சரான டாக்டர். பார்தி பிரவின் பவார், பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பொறுப்பையும் சேர்ந்து கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண் துறையும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹலாத் படேல் உள்ளிட்ட 12 பாஜக எம்.பி.க்களில் பத்து பேர் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்கள் கவனித்துவந்த தொகுதிகள் பிறருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், இவர்களில் பலரும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் இஸ்ரோவின் 10 திட்டங்கள் என்னென்ன? மத்திய அரசு தகவல்

click me!