ராணுவ முகாம்  மீது தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகள்  சுட்டுக் கொலை….ஜம்மு –காஷ்மீரில் இந்திய வீரர்கள் பதிலடி…

 
Published : Jun 05, 2017, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
ராணுவ முகாம்  மீது தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகள்  சுட்டுக் கொலை….ஜம்மு –காஷ்மீரில் இந்திய வீரர்கள் பதிலடி…

சுருக்கம்

4 pakistan terrorist shot dear by Indian army

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள சம்பல் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படை முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிராதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 இன்று அதிகாலை 4  மணிக்கு இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் 4 பேர் சம்பல் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையின் 45 படைப்பிரிவு முகாம் மீது தாக்குதல் நடத்தினர்.

திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலையடுத்து, இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சி செய்த தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். 

உயிரிழந்த 4 தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

 

 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!