9 பேர் பயணித்த ONGC ஹெலிகாப்டர் விபத்து… 4 பேர் உயிரிழப்பு!!

By Narendran SFirst Published Jun 28, 2022, 6:45 PM IST
Highlights

மும்பை அருகே ஏற்பட்ட ONGC ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே ஹெலிகாப்டர் ஒன்று 9 பேருடன் நடுக்கடலில் ONGC ஆயில் எடுக்கும் இடத்துக்குச் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாகர் கிரன் ONGC ஆயில் தளத்துக்கு அருகே கடலில் விழுந்தது. மிதவை பொருத்தப்பட்டிருந்ததால் ஹெலிகாப்டர் கடலில் விழுந்தும் நீரில் மூழ்காமல் தப்பியது. இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 2 கப்பல்கள் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டன. அதோடு கடலோர பாதுகாப்புபடை விமானம் ஹெலிகாப்டர் கடலில் விழுந்த இடத்துக்கு வந்து தேவையான உதவிகளைச் செய்தது. ஹெலிகாப்டர் ஆயில் எடுக்கும் இடத்தில் இறங்க முயன்ற போது பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: google, Amazon வேண்டாம்! படிக்கும்போதே facebookக்கில் வேலை பெற்ற அங்கன்வாடி ஊழியர் மகன்

அதன் காரணமாக தரையிறங்க வேண்டிய இடத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் மிதவையின் உதவியுடன் தரையிறங்கியிருக்கிறது. மீட்பு பணியில் மால்விய-16 கப்பலும் ஈடுபட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த 9 பேரும் மீட்கப்பட்டு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் முகேஷ் படேல், விஜய் மாண்ட்லோய், சத்யம்பத் பத்ரா மற்றும் சஞ்சு பிரான்சிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு கிராமத்துக்கு, இப்போ தான் மின்சார வசதி கிடைக்குது !

இந்த நால்வரும் இன்று காலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு பவன் ஹான்ஸ் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். நான்கு ஆம்புலன்ஸ்களில் இருந்து அவர்களை நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் உயிரிழந்த 4 பேருக்கு ஓஎன்ஜிசி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் கடலில் கடுமையான சீற்றம் ஏற்பட்டு ONGC நிறுவனம் ஆயில் எடுக்கும் தளத்தில் அதிகாரிகள் தங்கியிருந்த படகுகள் கடலில் இழுத்துச்செல்லப்பட்டு பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!