மக்களவைக்குள் பிடிபட்ட சாகர் சர்மா மற்றும் டி மனோரஞ்சன் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட நீலம் தேவி மற்றும் அமோல் ஷிண்டே ஆகியோரை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
நாடாளுமன்ற பாதுகாப்புகளை மீறி இரண்டு பேர் மக்களவையில் நுழைந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைக்காக ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவைக்குள் பிடிபட்ட சாகர் சர்மா மற்றும் டி மனோரஞ்சன் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட நீலம் தேவி மற்றும் அமோல் ஷிண்டே ஆகியோரை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
undefined
புதன்கிழமை மதியம் நாடாளுமன்ற மக்களவைக்குள் நுழைந்த இருவர், தாங்கள் மறைத்து வைத்திருந்த மஞ்சள் புகை குப்பிகளை வீசி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோவைச் சேர்ந்த சாகர் ஷர்மா மற்றும் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து புகைக் குப்பிகளை வீசினர் என்று கண்டறியப்பட்டது. தீடிரென எழுந்த மஞ்சள் புகையால் சிறிது நேரம் அவையில் பீதி ஏற்பட்டது. இருவரும் விரைவில் எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு ஊழியர்களால் பிடிக்கப்பட்டனர்.
DeepSouth! மனித மூளைக்கு சவால் விடும் முதல் சூப்பர் கம்ப்யூட்டர்! 2024 முதல் ஆக்ஷன் ஆரம்பம்!
மேலும் இருவரும், நாளாளுமன்ற வளாகத்திற்குள் புகை குப்பிகளை வீசி கோஷங்களை எழுப்பினர். இந்த நான்கு பேர் மீதும் உபா (UAPA) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு முன் நால்வரும் குருகிராமில் விஷால் என்பவருடைய வீட்டில் தங்கியுள்ளனர். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துமீறலைத் திட்டமிட்டவராகக் கருதப்படும் லலித் ஜா என்பவர் தலைமறைவாக இருக்கிறார்.
நால்வரையும் டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் எடுத்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டனர். “இந்தச் சம்பவத்தின் நோக்கம் அவர்களின் கருத்தை வெளிப்படுத்துவதற்கு மட்டுமா அல்லது வேறு ஏதேனும் நோக்கங்கள் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
போலீசாரின் வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
நாங்க நினைச்சது நடக்கும் வரை உக்ரைனுக்கு அமைதி கிடையாது! ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்