
குஜராத் ராஜ்கோட்டில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 3.4 மற்றும் 3.1 ரிக்டர் அளவிலான இரண்டு சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அப்பகுதியில் இதுபோன்ற நிலநடுக்கங்களின் எண்ணிக்கையை மூன்றாவது முறை ஏற்பட்டுள்ளது.
இதனை நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISR) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். சவர்குண்ட்லா தாலுகாவில் உள்ள மிதியாலா கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை 11.40 மணியளவில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் குஜராத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்
ராஜ்கோட்டின் வடமேற்கே (NNW) 270 கிலோமீட்டர் தொலைவில் அதன் மையப்பகுதியுடன் பிற்பகல் 3:21 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று NCS ட்வீட் செய்துள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த வாரம், குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் இரண்டு நாட்களில் மூன்று சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்று நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்