மேலும் 360 இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்பு! விமானம் மூலம் நாடு திரும்புதாகத் தகவல்

By SG Balan  |  First Published Apr 26, 2023, 6:35 PM IST

உள்நாட்டுப் போர் நடைபெறும் சூடான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் காவேரி' நடவடிக்கை மூலம் மேலும் 360 பேர் இந்தியாவுக்குத் திரும்புகின்றனர்.


ஆபரேஷன் காவேரியின் கீழ் இந்தியா சூடானில் இருந்து இந்தியர்களை மீட்குப் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்தியக் கடற்படையில் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்திய குடிமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சூடானில் அந்நாட்டு ராணுவமும் துணை ராணுவமும் சண்டையிட்டுக் கொள்வதால் அந்த நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் காவேரி மீட்புப் பணியை மத்திய அரசு தொடங்கியது. இதன்படி, சூடானில் இருந்து இதுவரை சுமார் 530 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

பாக்கெட் மணியை சேமித்து நன்கொடை வழங்கிய சிறுமி நந்தினி! பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியர்களை வெளியேற்றும் பணியின் கீழ், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து இந்தியர்களும் சவுதி அரேபியாவின் கடலோர நகரமான ஜெட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுகின்றனர். அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்குத் திரும்புகின்றனர்.

Happy to see off 360 Indians at Jeddah Airport in a flight bound for New Delhi

They will be reaching the motherland soon, reuniting with their families

Under the Government is working relentlessly to evacuate Indian nationals from Sudan & bring them home safely pic.twitter.com/0kCIH35jyb

— V. Muraleedharan (@MOS_MEA)

இந்தியர்களை மீட்கும் பணியை மேற்பார்வையிட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் ஜெட்டாவிற்குச் சென்றுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஜெட்டா விமான நிலையத்தில் டெல்லி செல்லும் விமானத்தில் 360 இந்தியர்களை பார்த்ததில் மகிழ்ச்சி. அவர்கள் விரைவில் தாய்நாட்டை அடைவார்கள். அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைவார்கள். ஆபரேஷன் காவேரியின் கீழ் சூடானில் இருந்து இந்திய நாட்டினரை வெளியேற்றி, அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் அயராது உழைத்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு இந்தியரையும் திரும்ப அழைத்து வர பிரதமர் மோடி சபதம் செய்துள்ளதாக அமைச்சர் முரளீதரன் கப்பலில் உள்ள மக்களிடம் கூறுவதை வீடியோவில் காணலாம்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை முதல் கட்டமாக 278 பேர் சூடானில் இருந்து புறப்பட்டிருப்பதாகவும் அவர்கள் ஐஎன்எஸ் சுமேதா கப்பலில் போர்ட் சூடானில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு வருவதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார்.

பிரியங்கா காந்திக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்த காங்கிரஸ் தொண்டர்!

click me!