ஒரே நாளில் 4 பேர் உயிரை பறித்த கொரோனா.! 6451 பேருக்கு பாதிப்பு- மீண்டும் வேகமாக பரவும் வைரஸ்

Published : Jun 09, 2025, 11:47 AM IST
corona cases in india today update

சுருக்கம்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு : கொரோனா பாதிப்பால் உலகமே 3 ஆண்டுகள் முடங்கிக்கிடந்தது. பல லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கொத்து கொத்தாக உயிரிழந்தனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பலருக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வேலைகளும் இழந்தனர். இதனையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்தது. மீண்டும் இயல்பு வாழ்க்கை தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 4 பேர் பலி

வெளிநாடுகளில் வேகமாக பரவிய கொரோனா இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முன் தினம் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனாவுக்கு இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 18 பேரும், கேரளாவில் 12 நபர்களும், டில்லி, கர்நாடகாவில் தலா 7 பேரும் தமிழகத்தில் 5 பேரின் உயிரை பறித்துள்ளது. 

24 மணி நேரத்தில் 624 பேர் வீடு திரும்பியுள்ளனர்

இந்த நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுதும் புதிதாக 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஒட்டுமொத்தமாக 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லையெனவும் இந்தியா முழுவதும் நேற்று 624 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு அவசியம் இல்லை

இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லையென தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது பரவி வரும் கொரோனா வீரியம் குறைவாக இருப்பதால் அச்சம் அடைய தேவையில்லையென தெரிவித்துள்ளார். அதே நேரம் அதிகம் மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் முக்கவசம் அணிவது நல்லது எனவும் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!