நிதி இல்லை..!! மீண்டும் ஏமாற்றிய மத்திய அரசு... தமிழகத்தை மட்டும் புறக்கணிப்பதா...?

By Narendran SFirst Published Dec 30, 2021, 8:55 PM IST
Highlights

ஆறு மாநிலங்களுக்கு கூடுதல் மத்திய மானியமாக ரூ.3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தமிழகம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

ஆறு மாநிலங்களுக்கு கூடுதல் மத்திய மானியமாக ரூ.3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தமிழகம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் மத்திய மானியமாக ரூ.3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் தமிழகம், குஜராத், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் வெள்ளம், நிலச்சரிவு, புயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டது. இதை அடுத்து இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வர நிவாரண நிதி வழங்க கோரி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் மத்திய மானியமாக ரூ.3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

டௌக்டே சூறாவளியால் 2021ல் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1,133.35 கோடி, யாஸ் சூறாவளியால் 2021ல் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.586.59 கோடி, 2021 தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளுக்காக அஸ்ஸாமுக்கு ரூ.51.53 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.187.18 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த கூடுதல் உதவியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்கு கூடுதலாகும். 2021-22 ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3,543.54 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. டௌக்டே மற்றும் யாஸ் புயல்களுக்குப் பிறகு, 20.05.2021 அன்று தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குஜராத்திற்கு முன்பணமாக ரூ.1,000 கோடி விடுவிக்கப்பட்டது. 29.05.2021 அன்று மேற்கு வங்காளத்திற்கு ரூ.300 கோடி வழங்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில், இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து கோரிக்கையைப் பெறுவதற்குக் காத்திருக்காமல், 22 அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுக்களை மத்திய அரசு உடனடியாக நியமித்தது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் கடும் பாதிப்புக்குள்ளான தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்காதது தமிழ்நாட்டின் மீது உள்ள மத்திய அரசின் விரோதப்போக்கை காட்டுகிறது. முன்னதாக தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள், அதை மேலும் கடுமையாக்கி உள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதியும், முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை சரி செய்யவும், சேதமடைந்த  உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும், தேவையான நிதியை உடனே ஒதுக்க, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் கடும் பாதிப்புக்குள்ளான தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்காதது தமிழ்நாட்டின் மீது உள்ள மத்திய அரசின் விரோதப்போக்கை காட்டுகிறது. 

click me!