
புதுச்சேரியில் தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போரூரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், அவரது மனைவி துளசி, மகன் பாலமுருகன் ஆகிய 3 பேரும், நேற்று முன்தினம் புதுச்சேரி சென்றுள்ளனர். அங்கு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
நேற்றிரவு வரை அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினா், அறைக் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, 3 பேரும் சடலமாக கிடந்துள்ளனர். அறையில் மருந்து பாட்டில் கிடந்ததால், அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட 3 பேரும், தங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்துள்ளனர்.
அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினா், 3 பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.