காஷ்மீர் என்கவுண்ட்டர்.. 11 மணி நேர தேடுதல் வேட்டை... மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை...!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 12, 2022, 08:02 AM IST
காஷ்மீர் என்கவுண்ட்டர்.. 11 மணி நேர தேடுதல் வேட்டை... மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை...!

சுருக்கம்

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவை அடுத்த திராப்காம் பகுதியில் ஏற்பட்ட என்கவுண்ட்டரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலமாக இந்துக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்கள் மீது பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை முன்னிட்டு தீவிரவாதிகளை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் இணைந்து பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த தொடங்கினர்.

மொத்தம் 11 மணி நேர தேடுதல் வேட்டை, என்கவுண்டரை அடுத்து லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேடுதல் வேட்டை:

“புல்வாமா என்கவுண்ட்டர் அப்டேட்: 02 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் அடையாளங்களை காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என ஜம்மு காஷ்மீர் காவல் துறைக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இன்று நடைபெற்ற என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் ஜூனைத் ஷீர்ஜோக்ரி என கண்டறியப்பட்டு இருக்கிறது. “மூன்று பேரும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் உள்ளூர்வாசிகள், இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் ஒருத்தர் ஜூனைத் ஷீர்ஜோக்ரி என கண்டறியப்பட்டு இருக்கிறது. இவர் கடந்த மே 13 ஆம் தேதி ரியாஸ் அகமது என்ற போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்,” என ஜம்மு காஷ்மீர் போலீஸ் தெரிவித்து இருக்கிறது. நேற்று மாலை 6.55 மணி அளவில் என்கவுண்டர் தொடங்கியது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tirupati Darshan: அபிஷேக சேவை நேரத்திலும் தரிசனம் செய்யலாம்.. திருமலை திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்
Lost Luggage: ரயில்ல பை, போனை விட்டுட்டீங்களா? இந்த ஒரு நம்பருக்கு கால் பண்ணா போதும்!