ரயில்வே துறையில் நேற்று 3 கோடி பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்களை திருடியுள்ளனர், ஆனால், ஹேக்கர்கள் யார், எங்கிருந்து இயங்கினார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ரயில்வே திணறுகிறது
ரயில்வே துறையில் நேற்று 3 கோடி பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்களை திருடியுள்ளனர், ஆனால், ஹேக்கர்கள் யார், எங்கிருந்து இயங்கினார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ரயில்வே திணறுகிறது
ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் பெயர், மின்அஞ்சல், செல்போன் எண், பாலினம், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ரயில்வே இணையதளத்தில் இருக்கும்.
பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் சென்ற கார் மைசூரு அருகே விபத்து:பலர் காயம்: வீடியோ
பயணிகளின் இந்த தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் நேற்று திருடியுள்ளனர். அது மட்டுமல்லாமல் அரசு சார்ந்த பல்வேறு நிறுவனங்கள், பிரிவுகள், துறைகளின் மின்அஞ்சல்களையும் ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.
ஹேக்கர்கள் தங்களின் விவரங்கள் குறித்து எந்தத் தகவலையும் விட்டுச் செல்லவில்லை. திருடப்பட்ட பயணிகளின் விவரங்களின் உண்மைத்தன்மை, அந்த விவரங்களை வைத்து ஹேக்கர்கள் என்ன செய்ய முடியும் என்பது குறி்த்து சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆனால், பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் திருடிய விவரம் தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள், ரயில்வே அமைச்சக அதிகாரிகளிடம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
இந்திய அரசியலிலேயே அதிகஊழல் நிறைந்த குடும்பம் என்றால் அது சோனியா காந்தி குடும்பம்தான்: பாஜக விளாசல்
இந்த பயணிகளின் விவரங்கள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை. இந்த விவரங்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்து ஹேக்கர்கள் திருடினார்களா அல்லது ரயில்வே இணையதளத்தில் இருந்து திருடினார்களா என்பது குறித்து ரயில்வே அமைச்சகம் தெரிவிக்க மறுகிக்கிறது.
இந்திய ரயில்வேயில் பயணிகள் விவரங்கள் ஹேக்கர்கள் மூலம் திருடுபோவது இது முதல்முறை அல்ல. கடந்த 2020ம் ஆண்டு 90 லட்சத்துக்கு மேலான பயணிகளின் விவரங்கள், அவர்களின் ஐடி, செல்போன்,மின்அஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஹேக்கர்கள் எடுத்துச் சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்